Tuesday, December 1, 2020

Attitude

*இந்த 26 வார்த்தைகள்!* 
🌸 *எவ்வளவு அழகு*🌸

*A - #Appreciation*
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - #Behaviour*
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

*C - #Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

*D - #Depression*
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - #Ego*
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

*F - #Forgive*
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

*G - #Genuineness*
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

*H - #Honesty*
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

*I - #Inferiority Complex*
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

*J - #Jealousy*
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

*K - #Kindness*
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

*L - #Loose Talk*
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

*M - #Misunderstanding*
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

*N - #Neutral*
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

*O - #Over Expectation*
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

*P - #Patience*
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

*Q - #Quietness*
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

*R - #Roughness*
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
I am proud of my சாதி ...என்பது முட்டாள்தனம்.

*S - #Stubbornness*
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

*T - #Twisting*
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

*U - #Underestimate*
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

*V - #Voluntary*
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

*W - #Wound*
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

*X - #Xerox*
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

*Y - #Yield*
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

*Z - #Zero*
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்...

Monday, December 9, 2019

வேலை தேடும் பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்

*வேலை தேடும் பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்*

பட்ட படிப்பின் இறுதி ஆண்டை முடித்த மாணவர்கள் பெரும்பாலோனோர் வேலை தேட ஆரம்பிக்கும் காலம் இது. பலர் ஏற்கனவே வேலை தேடிக்கொண்டிருக்கலாம், சிலர் இன்னும் சில நாள்களில் வேலை தேட துவங்கலாம். எப்படியும் நல்ல வேலை கிடைத்துவிட வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாக இருக்கும், நல்ல வேலை கிடைக்க சில ஆலோசனைகளை பார்ப்போம்.

படித்து முடித்த உடன் வேலை கிடைக்குமா ?

படித்து முடித்துவிட்டோம், அனைத்து பாடத்திலும் தேர்சி அடைந்துவிட்டோம், கையில் டிகிரி உள்ளது எனவே உடனே வேலை கிடைத்துவிடும் என மாணவர்கள் எண்ண வேண்டாம். வெரும் டிகிரி வைத்து இருப்பதினால் மட்டும் நல்ல வேலை கிடைத்து விடாது, இன்டெர்வியூவில் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் அளித்தால் தான் வேலை கிடைக்கும், வேலைக்கு ஒரு இடம் காலியாக இருந்தால் 10 பேரை இன்டர்வியூவிற்க்கு கூப்பிடுவார்கள், அந்த 10 பேரை விட நாம் சிறப்பாக பதில் அளித்தால்தான் நமக்கு வேலை கிடைக்கும், எனவே வேலை கிடைப்பது என்பது நீங்கள் வாங்கிய டிகிரியில் (மட்டும்) இல்லை உங்கள் திறமையில்தான் இருக்கின்றது.

*திறமை மட்டும் இருந்தால் போதாதா?*

பிறகெதற்க்கு டிகிரி படிக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கையே, இதை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம், ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்ள 70 கிலோ எடையும் 6 அடி உயரமும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறதென்று வைத்துகொள்வோம், ஒருவர் வந்து நான் 70 கிலோ எடை மற்றும் 6 அடி உயரம் உள்ளவன் எனவே எனக்கு முதல் பரிசு கொடுங்கள் என்று சொன்னால் போட்டி நடத்துபவர்கள் அவருக்கு பரிசு வழங்க மாட்டார்கள், நீங்கள் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் அனைவருடன் சேர்ந்து வேகமாக ஓடி முதலாவதாக வந்து பரிசை எடுத்து செல்லுங்கள் என்று கூறுவார்கள். 6 அடி உயரம், 70 கிலோ எடை என்பது போட்டியில் கலந்து கொள்ள தகுதிதானே தவிர அதுவே போட்டியில் வெற்றியை தராது, ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஓடி தான் வெற்றி பெற வேண்டும் , அதே போல் இன்டெர்வியூவில் கலந்து கொள்ள தகுதிதான் உங்கள் டிகிரி தவிர. டிகிரியே வேலை வாங்கி தராது, உங்கள் அறிவும் திறமையும் தான் உங்களுக்கு வேலை வாங்கி தரும்.

*படித்தால் வேலை கிடைக்காதா?* என்ற கேள்விக்கு விடை, நன்றாக படித்து ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொண்டு, தொடர்பு திறனையும் (communication skill) வளர்த்து கொண்டால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் 

*ஆங்கில பேச்சாற்றல் (English language skill)* :

இன்டெர்வியூவில் முதலில் பார்ப்பது உங்களின் ஆங்கில மொழி திறமை, எந்த ஒரு கம்பெனியிலும் அலுவல் மொழி ஆங்கிலமாகதான் இருக்கும், மேலும் பல மொழி பேச கூடியவர்களும் பணி புரிவார்கள் அவர்களிடம் பேச பொதுவான மொழி ஆங்கிலம் தான். எனவே தான் ஆங்கில மொழிதிறமை பிரதானமாக பார்க்கப்படுகின்றனது.

*தொடர்பு திறன் (communication skill)* :

நமக்கு தெரிந்ததை பிறக்கு எளிய முறையில் எடுத்து சொல்லும் திறன் தான் தொடர்பு திறன் (communication skill) , கேள்விகள் கேட்க்கப்படும் போது சரியான பதிலை தெளிவாக எடுத்துறைக்க தொடர்பு திறன் மிக அவசியம். மேலும் *குழு கலந்துறையாடல் (Group Discussion) தேர்வில் வெற்றி பெற இந்த தொடர்பு திறன்* மிக அவசியம்.

*படித்த பாடத்தில் ஆழ்ந்த அறிவு (Subject knowledge)* :

நாம் எந்த பாட பிரிவை (branch) தேர்ந்தெடுத்து படித்தோமோ அதில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல கூடிய அளவிற்க்கு நமது பாடங்களை நன்றாக படித்து இருக்க வேன்டும், மொத்த பாடபிரிவுகளையும் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இரண்டு அல்லது மூன்று பாட பிரிவுகளை (subject) மிக நன்றாக படித்து அதில் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.

*எல்லாம் சரிதான் இப்ப என்ன செய்வது?*

டிகிரி படித்து முடித்தாகிவிட்டது, போதிய ஆங்கில பேச்சாற்றல் இல்லை, communication skill இல்லை, பாட அறிவு (subject knowledge) ஓரளவிற்க்கு தான் இருக்கு, இப்ப என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். அப்படிப்பட்ட மாணவர்களுக்கான வேலை தேடும் வழிமுறைகள்

*Resume- தயாரித்தல் :*

உங்கள் Resume-தான் உங்களை பற்றி வெளி உலகிற்க்கு தெரிவிப்பது. எனவே அதை தெளிவாக சுருக்கமாக எழுதுங்கள், உங்களுக்கு தெரியாததை Resume-ல் போடாதீர்கள், நன்றாக தெரிந்ததை மட்டும் போடுங்கள் ஓரளவிற்க்கு தெரியும் என்றால் , ஓரளவிற்க்கு தெரியும் என குறிப்பிடுங்கள் (Familiar with). சிறந்த Resume தயாரிக்க இணையதளத்தில் பல வெப்சைடைட்டுகள் உள்ளன அதை பார்த்து சிறந்த Resume தயாரித்து கொள்ளுங்கள்.

*Application Request விண்ணப்பித்தல் :*

தயாரித்த Resume-யை *naukri.com, timesjobs.com* போன்ற வேலை தேடும் இனையதளங்களில் Upload செய்யுங்கள், Email Notification-யை செலெக்ட் செய்து கொள்ளுங்கள் இதனால் தினமும் வேலை வாய்ப்பு சம்மந்தமான Email வரும் அதை தினமும் படித்து உங்களுக்கு பொருத்தமாக இன்டெர்வியூற்க்கு செல்லுங்கள்.

*அதிகப்படியான இன்டெர்வியூவில் கலந்து கொள்ளுங்கள்* :

வாய்ப்புகள் உள்ள அனைத்து இன்டெர்வியூவிலும் கலந்து கொள்ளுங்கள், வேலை கிடைக்காவிட்டாலும் , இன்டெர்வியூவில் கலந்து கொண்ட அனுபவம் கிடைக்கும், இன்டெர்வியூவில் நீங்கள் தோற்றாலும், இன்டெர்வியூ எடுத்தவரிடம் உங்களிடம் உள்ள குறைகளை கேளுங்கள், அதை குறித்து வைத்துகொண்டு அடுத்த இன்டெர்வியூவில் அந்த குறையை சரி செய்ய முயற்ச்சி செய்யுங்கள்
இப்படி தொடர்ந்து குறைகளை கலைந்து இன்டெர்வியூவில் கலந்து கொண்டால் 20-வது அல்லது 25-வது இன்டெர்வியூவிலாவது வேலை கிடைக்கும். இன்டெர்வியூவில் கலந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் feedback- யை தெரிந்து கொண்டு உங்களை அதற்க்கு ஏற்றார் போல் தயாரித்து கொண்டு அடுத்த இன்டெர்வியூ என தொடர்ந்து *முயற்சி செய்தால் ஏதாவது இன்டெர்வியூவில் நிச்சயம் வேலை கிடைக்கும்*.

*திறன் வளர்த்தல்* :

வேலை தேடிகொண்டே உங்களுடைய திறன்களை வளர்க்க தினமும் நேரம் ஒதுக்குங்கள், ஆங்கிலம் என்பது ஒரு மொழி எனவே பேச பேச தான் மொழி திறமை வளரும், உங்களை போல் வேலை தேடுபவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள், ஆங்கில பேச்சற்றலை வளர்க்கும், உங்களுக்குள் ஆங்கிலத்தில் நண்பர்களுடன் பேசி பழகுங்கள். உங்களுக்குள் mock interview நடத்துங்கள், அதாவது உங்களில் ஒருவர் ஆங்கிலத்தில் இன்டெர்வியூ கேள்விகளை கேட்க வேண்டும் , நீங்கள் அதற்க்கு ஆங்கிலத்தில் பதில் சொல்ல வேண்டும் *உதவிக்கு google-லை அழைத்து கொள்ளுங்கள்*, நீங்கள் டிகிரியில் படித்த பாடத்தில் 2 அல்லது 3 பாடங்களை (subject) தேர்ந்தெடுத்து அதை ஆழ்ந்து படியுங்கள், அதில் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய அளவிற்க்கு படியுங்கள்

*நேரத்தை வீணாக்க வேண்டாம்* :

படித்து முடித்த பட்டதாரிகளே! உங்களுக்கான வாய்ப்பு ஒர் ஆண்டுதான் , ஓர் ஆண்டிற்க்கு பிறகு அடுத்த ஆண்டு மாணவர்கள் வேலை தேட வந்துவிடுவார்கள் எனவே நேரத்தை வீணாக்காமல் வேலை தேடுவதற்க்கும், திறன்களை வளர்த்து கொள்வதற்க்கும் செலவிடுங்கள், கெட்ட நண்பர்களிடம் சேராதீர்கள். வேலை தேடும் நண்பர்கள் உடன் சேர்த்து வேலை தேடுங்கள். உங்களுக்குள் வேலை தேடல் வேண்டும் எப்பொழுதும். உங்களுக்கு வாய்ப்பிருந்தால் சென்னை அல்லது பெங்களூருவிற்க்கு இடம் பெயர்ந்து வேலை தேடுங்கள், ஏனெனில் இப்படி பட்ட பெரு நகரங்களில்தான் அதிக அளவு இன்டெர்வியூ நடைபெறும் .

*நினைத்த வேலை கிடைக்க வில்லை என்றால் என்ன செய்வது?*

நினைத்த சம்பளத்தில், நினைத்த துறையில் வேலை கிடைக்க வில்லை என்றால் தளர்ந்து விடாதீர்கள், *தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.* குடும்பம் வறுமையில் இருந்தால், வேலை கிடைக்கும் வரை சிறிய வேலைகளை செய்யலாம், சென்னை போன்ற நகரங்களில் மாதம் 10 ஆயிரத்திற்க்கு நிச்சயம் ஏதாவது ஒரு BPO வேலை அல்லது அலுவலக வேலை கிடைக்கும், அதில் சேர்ந்து கொண்டு வேலை தேடலாம். தொடந்து முயற்சி செய்யுங்கள், திறன்களை வளர்த்து கொள்ளுங்கள் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்

சிறிய கம்பெனிகளில் குறைவான சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் நல்ல துறையாக இருந்தால் சேர்ந்து விடுங்கள் 2 அல்லது 3 ஆண்டுகள் ஒப்பந்தம் போடுவார்கள், இருந்தாலும் பரவாயில்லை, நல்ல துறையாக இருந்தால் சேர்ந்து விடுங்கள், இதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து பின்னர் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கலாம்.

*வேலையே கிடைக்கவில்லை என்ன செய்வது?*

எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டோம் ஓராண்டுகள் ஆகியும் வேலை கிடைக்க வில்லை என்ன செய்வது என்ற நிலையில் சில பட்டதாரிகள் இருக்கலாம். இவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மேற்படிப்பு, B.Sc முடித்தால் M.Sc படியுங்கள், B.E முடித்தால் M.E/M.Tech படியுங்கள், இதனால் உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும், PG-யிலாவது நன்றாக படியுங்கள், தேவையான திறனை வளர்த்து கொள்ளுங்கள், நீங்கள் மறுபடியும் ஒரு Fresher ஆகலாம், அப்போது *வாய்ப்பை தவரவிடாமல் வேலை வாங்கிவிடுங்கள்.* மேற்படிப்பு படிப்ப GATE, TANCET , JAM போன்ற நுழைவு தேர்வுகளில் வெற்றி பெறுவது அவசியம், இதற்க்கான விண்ணப்பங்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வழங்கப்படும். எனவே வேலை தேடும் போதே இதற்க்கான விண்ணப்பங்களை வாங்கி அப்ளே செய்துவிடுங்கள், பின்னர் தேர்வு எழுதிகொள்ளலாம்.

எல்லாவற்றைவிடவும் மிக முக்கியமானது *உங்களின் நம்பிக்கை, நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும்* என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், கடினமாக உழைத்து வேலை பெறுவதற்க்கான திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள், வேலை கிடைக்கும் வரை முயற்சி செய்யுங்கள், வெற்றி பெறுங்கள

*வாழ்வில் நல்ல வேலை பெற்று வாழ்வில் வெற்றி பெற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்*

Sunday, August 16, 2015

தகுதி இருந்தால் உலகமே உங்களைத் தேடிவரும்.



தகுதி இருந்தால் உலகமே உங்களைத் தேடிவரும்.

தகுதி என்பதில் உள்ள
‘த’ என்பது தன்னம்பிக்கையையும்
‘கு’ என்பது குறிக்கோளையும்
, ‘தி’ என்பது திறமையையும் குறிக்கிறது!
ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி!

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு என்ன செய்வது? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது! தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் கீழ்க்காணும் மூன்று பண்புகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1. உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருபோதும் மற்றவர்களை குறை கூறாதீர்கள்.
2. திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள்.
3. சுயபட்சாதாபம் கொள்ளாதீர்கள்.
தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், அத்தோல்விக்குப் பொறுப்பேற்று அது எவ்வாறு நேர்ந்தது என்றும். இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் சிந்திக்க வேண்டும். சிந்திக்க சிந்திக்க தெளிவு பிறகும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சய் பாத்திரமாக மாறும்.
மேலும் வெற்றி உன்னை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும் ஆனால் தோல்வி தான் உன்னை உனக்கே அடையாளம் காட்டும். தோல்விக்கு பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் கூடுகிறது!
அத்துடன் திறமைகள் அதாவது சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத்திறன், பிரச்சனைகளைத் தீர்க்கும்திறன், படைப்பாற்றல் திறன், இயக்கத்திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளும்போது தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும்.

ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதியின் உள்ளே விருச்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாக பரிபூரண ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னபிக்கையோடு எதிர்கொண்டு அவர்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயற்சிக்க வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும், மனித உறவுத்திறனும், உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாயப்புகள் உங்களைத் தேடி வரும்!

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு இலட்சிய சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம்.
 —

ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி!


ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி!

வேலை கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட ஒரு காரணம், தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் ரெஸ்யூமே (Resume) எந்த வகையிலும் கவராமல் போவதே. எந்த நிறுவனமாக இருந்தாலும் நாம் தரும் ரெஸ்யூமே சரியாக இருந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும். அதனால்தான் வேலை தரும் மந்திரச் சாவி என்று அதனை சொல்கிறார்கள்.
இந்த ரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டும்? இதை எப்படி தயாரிப்பது?

'நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்று உச்சரிக்கிறார்கள். இது தவறு. 'ரெஸ்யூமே’ என்று உச்சரிப்பதே சரி! தவிர, பயோ டேட்டா (Bio Data), கரிகுலம் விட்டே (Curriculum Vitae), ரெஸ்யூமே ஆகிய மூன்றும் ஒன்று என்று நினைக்கிறார்கள் பலர்.

பயோ டேட்டா என்பது ஒருவருடைய உயரம், எடை, முழுவிவரம் அடங்கிய திரட்டு. இதை காவலர் வேலைக்கு ஆள் எடுக்கும்போதும், திருமணம் சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். கரிகுலம் விட்டே என்பது உயர்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்துவது. ஆனால், ரெஸ்யூமே என்பதுதான் வேலை தேடுபவர்கள் நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க பயன்படுத்துவது.
மூன்று வகைகள்!

ரெஸ்யூமேக்களில் மூன்று வகைகள் உள்ளன.

1. ரிவர்ஸ் குரோனாலாஜிக்கல் ரெஸ்யூமே (Reverse Chronological resume):
வேலைகளில் முன்அனுபவமுள்ளவர்கள் இது மாதிரியான ரெஸ்யூமேக்களை பயன்படுத்துவது நல்லது. இந்த ரெஸ்யூமேயில் தற்போது செய்யும் வேலை விவரங்களுடன் ஆரம்பித்து, மற்ற விவரங்களை அடுத்தடுத்து சொல்லலாம்.

2. ஃபங்ஷனல் ரெஸ்யூமே (Functional resume):
முதலில் ஸ்கில் ஏரியாக்களை (கல்வி அனுபவங்களை) குறிப்பிட்டு, பின்னர் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்தீர்கள் மற்றும் அது சார்ந்த அனுபவங்களை அடுத்தடுத்து தெரியப்படுத்தலாம்.

3. ஹைபிரிட் ரெஸ்யூமே (Hybrid resume):
மேலே சொன்ன இரண்டு வகையான ரெஸ்யூமேயின் கலவையாக இருப்பதுதான் ஹைபிரிட் ரெஸ்யூமே.

எப்படி இருக்க வேண்டும்?
ரெஸ்யூமேயின் மிக முக்கியமான நோக்கம், ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதுதான். ஒரு ரெஸ்யூமேயை ஈர்க்கும்படியாக தயார் செய்தாலே போதும், அது தன் கடமையை கச்சிதமாகச் செய்துவிடும்.
ரெஸ்யூமேயில் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் உண்மையானதாக இருக்கவேண்டும். மற்றவர்களை கவர எந்த பொய்யும் சொல்லக்கூடாது. உங்களைப் பற்றிய முக்கியமான விஷயங்களை அடிக்கோடிட்டு காட்டலாம். வித்தியாசப்படுத்திக்காட்ட தடித்த (Bold) எழுத்துகளில் எழுதலாம்.

முதல்முறை வேலைக்கு விண்ணப்பிப்பவர் எனில், உங்கள் கல்வி சார்ந்த விவரங்களையும், ஏற்கெனவே வேலை செய்தவராக இருந்தால் ஏற்கெனவே பார்த்த வேலை விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது இடைப்பட்ட காலத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தால் அதையும் ரெஸ்யூமேயில் குறிப்பிட வேண்டியது அவசியம்.

நாம் குறிப்பிடாவிட்டால் ஹெச்.ஆர். அதுபற்றி கேட்டு, அதற்கு பதில் சொல்லவேண்டிய நிலை ஏற்படும்.
இப்போது சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள, ஏற்கெனவே வேலை செய்த அலுவலகங்களுக்கு இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக விவரங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றன.

ஒரு நிறுவனம் ரெஸ்யூமேயை எந்த ஃபார்மெட் வழியாக (இ-மெயில், ஃபேக்ஸ், போஸ்ட் போன்றவை) அனுப்பவேண்டும் என்கிறதோ, அதன்படி அனுப்புவதே நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் அனுப்பிய ரெஸ்யூமே நிறுவனத்தின் பார்வைக்குச் செல்ல தாமதமாகலாம்.

வேலைக்கு ஏற்ற மாதிரி..!
நாம் எந்த வேலைக்குச் செல்கிறோமோ, அந்த வேலைக்கு ஏற்ற மாதிரி நம் ரெஸ்யூமே இருப்பது அவசியம். ஒரே ஃபார்மெட் கொண்ட ரெஸ்யூமேயை அனைத்து வேலைக்கும் பயன்படுத்துவது நல்லதல்ல.

உதாரணத்திற்கு, ஏற்கெனவே ஒரு நிறுவனத்தின் சேல்ஸ் பிரிவில் வேலை செய்த ஒருவர் மற்றொரு நிறுவனத்திற்கு வேலைக்காக தன் ரெஸ்யூமேயை அளிக்கிறார் எனில், அதில் ஏற்கெனவே வேலை செய்த விவரங்களை, அந்த நிறுவனம் உங்களால் அடைந்த லாபங்களை எண்களை கொண்டு குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி குறிப்பிடும்போது செய்வினை (Active) சொற்களை பயன்படுத்துவது நல்லது.

எத்தனை பக்கம்..?
ஒரு ரெஸ்யூமே அதிகபட்சமே இரண்டு பக்கம்தான் இருக்க வேண்டும். அதற்குள் அனைத்து விவரங்களையும் அப்டுடேட்டாக அடக்கிவிடுவது நல்லது. நம் ரெஸ்யூமேயைப் படிப்பவர் அதற்கு 20 - 30 வினாடிகள் மட்டுமே செலவழிப்பார். எனவே, இரண்டு பக்கத்திற்குள் அனைத்து தகவல்களையும் தெளிவாக அடக்குவது நல்லது.''
இனி ரெஸ்யூமேயை தயாரிக்கும்போது மேற்சொன்ன விஷயங்களை கவனியுங்கள்!

மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை??


மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை எளிதாக பெறுவதற்காக ஒரே இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு வழங்கும் அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் இந்த இணையதளம் ஒன்றிலேயே விண்ணப்பிக்க முடியும்.

. இந்த புதிய இணையதளம் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. புதிய இணையதம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளம்பரப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் உயர்கல்வித் துறை, சமூகநீதி மேம்பாட்டுத் துறை, பழங்குடியினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை, சிறுபான்மையினர்நலத் துறை, பள்ளிக் கல்வி- எழுத்தறிவுத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கல்வி உதவித் தொகைகள் குறித்த நேரத்தில் விரைவாகவும், நேரடியாகவும் மாணவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தேசிய இ-கல்வி உதவித்தொகை இணையதளத்தை (http//sholerships.gov.in) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது. இந்தக் கல்வி உதவித்தொகைகளைப் பெற விரும்பும் மாணவர்கள் முதலில், இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அவர்களால் இணையத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம், சம்பந்தப்பட்ட அவர்களுடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் சார்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டு பின்னர் இணையத்தில் இறுதியாக சமர்ப்பிக்கப்படும். மேலும் நாம் அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதையும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என வசதியும் உள்ளது.

V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..?





V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..? எத்தனை பேருக்கு தெரியும்..?

1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.

5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.

7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.

8. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

9. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.

10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.

12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.

13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.

14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.

15. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.

16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.

17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.

18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.

19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.

20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.

21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.

22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.

23. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை..