Sunday, August 16, 2015

தகுதி இருந்தால் உலகமே உங்களைத் தேடிவரும்.



தகுதி இருந்தால் உலகமே உங்களைத் தேடிவரும்.

தகுதி என்பதில் உள்ள
‘த’ என்பது தன்னம்பிக்கையையும்
‘கு’ என்பது குறிக்கோளையும்
, ‘தி’ என்பது திறமையையும் குறிக்கிறது!
ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி!

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு என்ன செய்வது? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது! தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் கீழ்க்காணும் மூன்று பண்புகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1. உங்களுடைய தோல்விகளுக்கு நீங்களே முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருபோதும் மற்றவர்களை குறை கூறாதீர்கள்.
2. திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள்.
3. சுயபட்சாதாபம் கொள்ளாதீர்கள்.
தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், அத்தோல்விக்குப் பொறுப்பேற்று அது எவ்வாறு நேர்ந்தது என்றும். இனிமேல் தோல்வி நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் சிந்திக்க வேண்டும். சிந்திக்க சிந்திக்க தெளிவு பிறகும். தெளிவான மனம் ஆற்றலின் அட்சய் பாத்திரமாக மாறும்.
மேலும் வெற்றி உன்னை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும் ஆனால் தோல்வி தான் உன்னை உனக்கே அடையாளம் காட்டும். தோல்விக்கு பொறுப்பேற்கும் போதுதான் தன்னம்பிக்கையும் மனவலிமையும் கூடுகிறது!
அத்துடன் திறமைகள் அதாவது சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத்திறன், பிரச்சனைகளைத் தீர்க்கும்திறன், படைப்பாற்றல் திறன், இயக்கத்திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளும்போது தன்னம்பிக்கையும் கூடவே வளர்கின்றது. நம்மாலும் முடியும் என்ற எண்ணமே தன்னம்பிக்கையாகும்.

ஒருபோதும் உங்களை நீங்களே தாழ்வாக எண்ணிப் பரிதாபப்படாதீர்கள். ஒரு சிறிய விதியின் உள்ளே விருச்சம் இருப்பதைப் போல உங்களுக்குள்ளாக பரிபூரண ஆற்றல் மறைந்திருக்கிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன்னபிக்கையோடு எதிர்கொண்டு அவர்றையெல்லாம் சாதனைகளாக்குங்கள். முதலில் தோல்வி நேர்ந்தாலும் முயற்சிக்க வெற்றிகள் மலரும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
மேற்கண்ட தகுதியுடன் தொழில் சார்ந்த நுட்பத்திறனும், மனித உறவுத்திறனும், உங்களுக்கு இருக்குமென்றால் வேலை வாயப்புகள் உங்களைத் தேடி வரும்!

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் தேவையான திறன்களையும் பண்புகளையும் வளர்த்துக் கொண்டு இலட்சிய சிகரத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம்.
 —

ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி!


ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி!

வேலை கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட ஒரு காரணம், தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் ரெஸ்யூமே (Resume) எந்த வகையிலும் கவராமல் போவதே. எந்த நிறுவனமாக இருந்தாலும் நாம் தரும் ரெஸ்யூமே சரியாக இருந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும். அதனால்தான் வேலை தரும் மந்திரச் சாவி என்று அதனை சொல்கிறார்கள்.
இந்த ரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டும்? இதை எப்படி தயாரிப்பது?

'நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்று உச்சரிக்கிறார்கள். இது தவறு. 'ரெஸ்யூமே’ என்று உச்சரிப்பதே சரி! தவிர, பயோ டேட்டா (Bio Data), கரிகுலம் விட்டே (Curriculum Vitae), ரெஸ்யூமே ஆகிய மூன்றும் ஒன்று என்று நினைக்கிறார்கள் பலர்.

பயோ டேட்டா என்பது ஒருவருடைய உயரம், எடை, முழுவிவரம் அடங்கிய திரட்டு. இதை காவலர் வேலைக்கு ஆள் எடுக்கும்போதும், திருமணம் சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். கரிகுலம் விட்டே என்பது உயர்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்துவது. ஆனால், ரெஸ்யூமே என்பதுதான் வேலை தேடுபவர்கள் நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க பயன்படுத்துவது.
மூன்று வகைகள்!

ரெஸ்யூமேக்களில் மூன்று வகைகள் உள்ளன.

1. ரிவர்ஸ் குரோனாலாஜிக்கல் ரெஸ்யூமே (Reverse Chronological resume):
வேலைகளில் முன்அனுபவமுள்ளவர்கள் இது மாதிரியான ரெஸ்யூமேக்களை பயன்படுத்துவது நல்லது. இந்த ரெஸ்யூமேயில் தற்போது செய்யும் வேலை விவரங்களுடன் ஆரம்பித்து, மற்ற விவரங்களை அடுத்தடுத்து சொல்லலாம்.

2. ஃபங்ஷனல் ரெஸ்யூமே (Functional resume):
முதலில் ஸ்கில் ஏரியாக்களை (கல்வி அனுபவங்களை) குறிப்பிட்டு, பின்னர் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்தீர்கள் மற்றும் அது சார்ந்த அனுபவங்களை அடுத்தடுத்து தெரியப்படுத்தலாம்.

3. ஹைபிரிட் ரெஸ்யூமே (Hybrid resume):
மேலே சொன்ன இரண்டு வகையான ரெஸ்யூமேயின் கலவையாக இருப்பதுதான் ஹைபிரிட் ரெஸ்யூமே.

எப்படி இருக்க வேண்டும்?
ரெஸ்யூமேயின் மிக முக்கியமான நோக்கம், ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதுதான். ஒரு ரெஸ்யூமேயை ஈர்க்கும்படியாக தயார் செய்தாலே போதும், அது தன் கடமையை கச்சிதமாகச் செய்துவிடும்.
ரெஸ்யூமேயில் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் உண்மையானதாக இருக்கவேண்டும். மற்றவர்களை கவர எந்த பொய்யும் சொல்லக்கூடாது. உங்களைப் பற்றிய முக்கியமான விஷயங்களை அடிக்கோடிட்டு காட்டலாம். வித்தியாசப்படுத்திக்காட்ட தடித்த (Bold) எழுத்துகளில் எழுதலாம்.

முதல்முறை வேலைக்கு விண்ணப்பிப்பவர் எனில், உங்கள் கல்வி சார்ந்த விவரங்களையும், ஏற்கெனவே வேலை செய்தவராக இருந்தால் ஏற்கெனவே பார்த்த வேலை விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது இடைப்பட்ட காலத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தால் அதையும் ரெஸ்யூமேயில் குறிப்பிட வேண்டியது அவசியம்.

நாம் குறிப்பிடாவிட்டால் ஹெச்.ஆர். அதுபற்றி கேட்டு, அதற்கு பதில் சொல்லவேண்டிய நிலை ஏற்படும்.
இப்போது சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள, ஏற்கெனவே வேலை செய்த அலுவலகங்களுக்கு இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக விவரங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றன.

ஒரு நிறுவனம் ரெஸ்யூமேயை எந்த ஃபார்மெட் வழியாக (இ-மெயில், ஃபேக்ஸ், போஸ்ட் போன்றவை) அனுப்பவேண்டும் என்கிறதோ, அதன்படி அனுப்புவதே நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் அனுப்பிய ரெஸ்யூமே நிறுவனத்தின் பார்வைக்குச் செல்ல தாமதமாகலாம்.

வேலைக்கு ஏற்ற மாதிரி..!
நாம் எந்த வேலைக்குச் செல்கிறோமோ, அந்த வேலைக்கு ஏற்ற மாதிரி நம் ரெஸ்யூமே இருப்பது அவசியம். ஒரே ஃபார்மெட் கொண்ட ரெஸ்யூமேயை அனைத்து வேலைக்கும் பயன்படுத்துவது நல்லதல்ல.

உதாரணத்திற்கு, ஏற்கெனவே ஒரு நிறுவனத்தின் சேல்ஸ் பிரிவில் வேலை செய்த ஒருவர் மற்றொரு நிறுவனத்திற்கு வேலைக்காக தன் ரெஸ்யூமேயை அளிக்கிறார் எனில், அதில் ஏற்கெனவே வேலை செய்த விவரங்களை, அந்த நிறுவனம் உங்களால் அடைந்த லாபங்களை எண்களை கொண்டு குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படி குறிப்பிடும்போது செய்வினை (Active) சொற்களை பயன்படுத்துவது நல்லது.

எத்தனை பக்கம்..?
ஒரு ரெஸ்யூமே அதிகபட்சமே இரண்டு பக்கம்தான் இருக்க வேண்டும். அதற்குள் அனைத்து விவரங்களையும் அப்டுடேட்டாக அடக்கிவிடுவது நல்லது. நம் ரெஸ்யூமேயைப் படிப்பவர் அதற்கு 20 - 30 வினாடிகள் மட்டுமே செலவழிப்பார். எனவே, இரண்டு பக்கத்திற்குள் அனைத்து தகவல்களையும் தெளிவாக அடக்குவது நல்லது.''
இனி ரெஸ்யூமேயை தயாரிக்கும்போது மேற்சொன்ன விஷயங்களை கவனியுங்கள்!

மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை??


மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை எளிதாக பெறுவதற்காக ஒரே இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசு வழங்கும் அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் இந்த இணையதளம் ஒன்றிலேயே விண்ணப்பிக்க முடியும்.

. இந்த புதிய இணையதளம் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. புதிய இணையதம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளம்பரப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் உயர்கல்வித் துறை, சமூகநீதி மேம்பாட்டுத் துறை, பழங்குடியினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை, சிறுபான்மையினர்நலத் துறை, பள்ளிக் கல்வி- எழுத்தறிவுத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கல்வி உதவித் தொகைகள் குறித்த நேரத்தில் விரைவாகவும், நேரடியாகவும் மாணவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தேசிய இ-கல்வி உதவித்தொகை இணையதளத்தை (http//sholerships.gov.in) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது. இந்தக் கல்வி உதவித்தொகைகளைப் பெற விரும்பும் மாணவர்கள் முதலில், இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அவர்களால் இணையத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம், சம்பந்தப்பட்ட அவர்களுடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் சார்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டு பின்னர் இணையத்தில் இறுதியாக சமர்ப்பிக்கப்படும். மேலும் நாம் அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா என்பதையும் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என வசதியும் உள்ளது.

V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..?





V.A.O - கிராம நிர்வாக அதிகாரியின் பணி என்ன..? எத்தனை பேருக்கு தெரியும்..?

1.கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.

5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.

7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.

8. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

9. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.

10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.

12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.

13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.

14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.

15. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.

16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.

17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.

18. உழவர்கள் நிலப் பட்டாக்காளை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.

19. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.

20. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.

21. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.

22. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.

23. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

24. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை..

COMMUNITY, INCOME, RESIDENCE CERTIFICATE ONLINE,,,,,,,




COMMUNITY, INCOME, RESIDENCE CERTIFICATE ONLINE,,,,,,,

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ் , No Graduate போன்றச் சான்றிதழ்களை பெற முடியும்.
இணைய முகவரி: http://edistrict.tn.gov.in/
 

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு



நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்க ளும் பற்றி பார்போம்.

1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.

2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதிலீடு செய்வ தற்கும் அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம் பளம் கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.

3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பி க்க முடியும்.

4. அதற்கு என்ன செலவாகும்?

இதற்காக ரூபாய் 94/- NRIகளுக்கு ரூபாய் 744/-மட்டுமே செலவாகும். புரோ க்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செல வாகு ம்.

5. PAN CARD – ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.

2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)

3) ரூ.50,000/-க்குமேல் வங்கியில் Fixed Deposit செய்யும்போது அவசிய ம்.

4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கி ல் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசிய ம்.

5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணை யங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.

6) வங்கி கணக்கு துவங்கும் போது.

7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.

8)தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி க்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.

9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிக மாக செலுத்தும் போது அவசி யம்.

10) வருமான வரி ரிட்டன தாக் கல் செய்ய அவசியம்.

11)சேவை வரி மற்றும் வணிக வரி துறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.

12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடுசெய்யும் போதுதான் பான்கார்டு அவசிய மிருந்தது. ஆனால், தற்போ து எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண் டும்.

மேலும், மைனர்பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டு ம். இதற்காக, தற்போது மைனர்களு க்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினை க்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிக மான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வரு கின்றனர்.

“மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக் கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண் ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக் கியுள்ளது.

மேலும், இந்தக் கார்டை வாங்கி னால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரிசெலுத்த வேண்டி யிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந் துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமானவரம்புக்குள் கொண்டு வருவதற் காகவே இந்த பான்கார்டு கட்டா யமாக்கப்பட்டுள்ளது.

பான்கார்டு பெறுவதற்கான நடை முறைகள் தற்போது மிகவும் எளி தாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெற விரும்புவோர்:
வருமான வரித்துறையின் Form 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான் றிதழை இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தை
http://www.utitsl.co.in/pan
(or)
www.tin-nsdl.com
(or)
www.incometaxindia.gov.in,
ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்தி லும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.
அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறிய

இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.
விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. பள்ளி டிசி 1. மின் கட்டண ரசீது
2. பிளஸ் டூ சான்றிதழ் 2. தொலைபேசி கட்டண ரசீது
3. கல்லூரி் சான்றிதழ் 3. வங்கிக் கணக்கு விவரம்
4. வங்கிக் கணக்கு விவரம் 4. வீட்டு வாடகை ரசீது
5. வாட்டர் பில் 5. பாஸ்போர்ட்
6. ரேசன் கார்டு 6. ரேசன் கார்டு
7. வீட்டு வரி ரசீது 7. வாக்காளர் அடையாள அட்டை
8. பாஸ்போர்ட் 8. வீட்டு வரி ரசீது
9. வாக்காளர் அட்டை 9. ஓட்டுனர் உரிமம்
10. ஓட்டுனர் உரிமம் 10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்

விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தா ல், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போ துமா னவை.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணை யத்தளத்தை நாடலாம்.

சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவர ங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்- எழுத் துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறி யீடாகும். அதைத் தெரிந்து கொள் வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக் கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப் பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டாஎன்பதை குறிக்கிறது.
C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J - Artificial Juridical Person
G – Government
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்துவரும் எண்கள் வரிசை எண்களாகு ம். இது 0001ல் ஆரம்பித்து 9999வரை செல்லும். கடைசி எழுத்து ம் வரிசை எண் தொடர்புடையதுதான்

மத்திய வருமான வரித்துறை அலுவ லகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்க ப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமி னேட்கார்டை பெறவேண்டும் என விரும் பினால் மட்டும் புதிதாக விண்ண ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும்போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதே போல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றா லோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்,,

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?


உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?

பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும். இந்த பிரச்சணயை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின் மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

தமிழ் நாடு தேர்தல் துறை

அது மட்டும் இல்லாமல் உங்கள் பெயரை தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியின் பெயர் மூலமாகவும் தேடலாம்.

www.elections.tn.gov.in/eroll/