Monday, August 17, 2015

பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம்



பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் இனிமேல் ஆன்லைனில் பெறலாம் 

அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது
சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.

பிறப்பு சான்றிதழ் பெற -
http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthCertificate.do?do=ShowBasicSearch

பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/birthCertificateList.do?method=editRecord&mode=enduser&regitrationNumber=COC%2F2011%2F08%2F116%2F000510%2F0

இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/online-civic-services/deathCertificateBasicSearch.jsp

இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/admin/deathCertificateList.do?method=editRecord&mode=enduser&registrationNumber=COC%2F2007%2F02%2F024%2F001095%2F0

இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birthhttps://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=150

கோயம்புத்தூர் மாநகராட்சி - Death -https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content&view=article&id=81&Itemid=151

மதுரை மாநகராட்சி - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)

திருச்சி மாநகராட்சி - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu

திருநெல்வேலி மாநகராட்சி
- http://tirunelvelicorp.tn.gov.in/download.html

சேலம் மாநாராட்சி

http://www.salemcorporation.gov.in/

ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?


ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?

வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர். இதன் காரணமாக, வருமான வரித் துறை பான் கார்ட் பெறுவதற்கான செயல்முறையை எளிமைபடுத்த முயன்று வருகிறது. ஆரம்ப நாட்களில் இடைத் தரகர்கள், குறிப்பாக சாட்டட் அக்கெளன்டன்டுகள் மூலமே இந்த பான் கார்டை பெறமுடிந்தது, ஆனால் இன்று இலகுவாக ஆன்லைன் மூலம் பான் கார்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணபத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தெளிவான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிமுறைகள் கொடுக்கப்படுவதால், இது மிக எளிமையான மற்றும் இலகுவான செயல்முறையாகும். ஆன்லைன் மூலம் பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு;

இணையத்தளம் வருமான வரி பான் சேவைப் பிரிவின் பின்வரும் இணையத்தள முகரிக்குச் செல்லவும் - https://tin.tin.nsdl.com/pan/

பான் விண்ணப்பப் படிவம்

பான் விண்ணப்பப் படிவம் இது வருமான வரி பான் சேவைப் பிரிவு இணையத்தளத்தின் முதல் பக்கமாகும், இதில் புதிய பான் விண்ணப்பப் படிவம், தகவல் அறிதல், ட்ராக்கிங்க் ஸ்டேடஸ், பான் கார்ட் ரீ-பிரிண்ட் செய்தல் மற்றும் பான் கார்ட் விபரங்கள் மாற்றம் செய்தல் அல்லது திருத்தங்கள் செய்தல் ஆகிய தேர்வுகள் உள்ளன. விண்ணப்பதாரர் தனக்குப் பொருத்தமான ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.

படிவம் 49ஏ

புதிதாக பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கு படிவம் 49ஏ ஐ பயன்படுத்த வேண்டும். https://tin.tin.nsdl.com/pan2/servlet/NewPanApp என்ற இணையத்தள முகவரியில், படிவம் 49ஏ ஐ ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய முடியும். கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். ஆன்லைன் மூலம் இந்த படிவம் சரியான முறையில் சமர்ப்பிக்கப் பட்ட பின்னர், இதற்கான அக்னாலேஜ்மென்ட், டிஸ்ப்ளே செய்யப்படும். இதில் 15 இலக்க அக்னாலேஜ்மென்ட் நம்பர் இருக்கும். அடுத்தடுத்த செயல்முறைக்காக இந்த அக்னாலேஜ்மென்டைப் பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆவணங்களை இணைத்தல்

இந்த அக்னாலேஜ்மென்ட் படிவம் வருமான வரித்துறைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். இதை அனுப்புவதற்கு முன்னர் இதனுடன் முகவரிச் சான்று மற்றும் அடையாள சான்று ஆகிய முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆவணங்களில் உங்கள் பெயர் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதே போலவே பான் விண்ணப்ப படிவத்திலும் இருக்க வேண்டும். ஆகவே படிவம் 49ஏ ஐ பூர்த்தி செய்யும் போது மிக கவனமாக இருக்கவும்.

புகைப்படம்

சமீபத்தில் எடுத்த இரண்டு கலர் புகைப்படங்களை, இந்த அக்னாலேஜ்மென்ட் படிவத்தில் அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒட்ட வேண்டும். அதே போல் குறிக்கப்பட்ட இடங்களில் கையெழுத்திட வேண்டும். நீங்கள் ஒட்டும் புகைப்படமே உங்கள் கார்டில் பிர்ண்ட் செய்யப்படுவதால், இந்த புகைபடங்கள் அண்மையில் எடுத்ததாகவும். தெளிவானதாகவும் இருக்க வேண்டும்.

இதற்கான கட்டணம் வெறும் ரூ.96

தான் உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவுக்குள் இருந்தால். நீங்கள் பான் விண்ணப்பத்திற்காக ரூ.96/- கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை பின்வரும் முறைகள் மூலம் செலுத்தலாம் - காசோலை, டிமான்ட் ட்ராப்ட், இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட். தொடர்பு முகவரி வெளிநாட்டு முகவரியாக இருந்தால், ரூ.962/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் இந்த தொகை டிமான்ட் ட்ராப்ட் மூலம் செலுத்தபட வேண்டும். ஒரு வேளை, இன்டர்நெட் பாங்கிங், கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் செலுத்த விரும்பினால், விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்படும் போதே செலுத்த வேண்டும், இதற்கு பேமென்ட் அக்னாலேஜ்மென்ட் கொடுக்கப்படும். இதை பிரிண்ட் செய்து அக்னாலேஜ்மென்ட் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

15 நாட்கள் மட்டுமே

ஆகவே அக்னாலேஜ்மென்ட் படிவத்துடன் - புகைப்படங்கள், முகவரிச் சான்று, அடையாளச் சான்று மற்றும் கட்டணதொகை/ கட்டணம் செலுத்தப்பட்டதற்கான சான்று ஆகியவை இணைந்திருக்க வேண்டும். இது விண்ணபித்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், பூனாவிலுள்ள என்எஸ்டிஎல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதை அனுப்பும் போது அஞ்சல் உறையின் மீது ‘அப்ளிகேஷன் ஃபார் பான்- அக்னாலேஜ்மென்ட் நம்பர்' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். கட்டணத் தொகை கிடைத்த பின்னர், என்எஸ்டிஎல், விண்ணப்பத்தை ஃப்ராசஸ் செய்யும் அதாவது காசோலை அல்லது டிமாண்ட் ட்ராஃப் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டால், பேமென்ட் கிளியர் ஆகும் வரை காத்திருக்க வேண்டும்.

ஆப்ளிகேஷன் டிரக்கிங்

அக்னாலேஜ்மென்ட் படிவத்தை அனுப்பிய பின்னர், ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்ப ஸ்டேடஸ் பற்றி தெரிந்து கொள்ள முடியும். கட்டணம் செலுத்தப்பட்ட விபரங்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். என்எஸ்டிஎல் முகவரிக்கு எழுதுவதன் மூலம் அல்லது 57575 என்ற நம்பருக்கு - என்எஸ்டிஎல்பான் - இடைவெளி - அக்னாலேஜ்மென்ட் நம்பர் டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் ட்ராக்கிங் செய்யும் வசதியை என்எஸ்டிஎல் வழங்குகிறது.

விபரங்களை மாற்றுதல் அல்லது திருத்தம் செய்தல்

உங்களிடம் ஏற்கனவே உள்ள பான் கார்ட் விபரங்களை மாற்றுவதற்கு அல்லது திருத்தம் செய்வதற்கான செயல்முறை, புதிய பான் கார்ட் விண்ணப்பம் செய்யும் முறையை ஒத்தது. இதற்கு வருமான வரித்துறையின் பான் சேவைப் பிரிவு இணையத்தள முகப்பில் உள்ள "பான் விபர மாற்றங்கள் அல்லது திருத்தங்கள்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் பான் மாற்ற வேண்டுகோள் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றவும். இந்த பான் மாற்ற வேண்டுகோள் பிரிவிலும், தனிப்பட்ட வழிமுறைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகிய அனைத்தும் கொடுக்கபட்டிருக்கும்.

இனிமேல் ஈசியாக பான் கார்ட் பெறலாம்

ஆகவே நீங்கள் இனிமேல் பான் கார்ட் பெறுவதற்கு வேறு ஒருவரை அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலே கூறப்பட்ட ஸ்டெப்புகளை பின்பற்றி பான் கார்டை இலகுவாக பெற்றுக்கொள்ளுங்கள். மேலே கூறப்பட்டுள்ள நடைமுறைகள் எளிதாக மற்றும் சுயமாக புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. போதிய அறிவுறுத்தல்கள், வழிமுறைகள் மற்றும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாவை ஆகிய அனைத்து விபரங்களும் பான் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது, இணையத்தளத்தில் உங்களுக்கு தெளிவாக கொடுக்கப்படும்.

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்


தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் இங்கே

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.

மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.

கட்டணம்,
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.

தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை:
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த:
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.

பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.

பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.

பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.

பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படி பெறுவது?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

http://www.stationeryprinting.tn.gov.in/forms.htmவிண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
***************************************************************************************************************
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் விண்ணப்பம். (மாதிரி)


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் விண்ணப்பம். (மாதிரி)

ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் 

அனுப்புநர் : (உங்கள் முழு முகவரியை எழுதவும் )

பெறுநர் : பொது தகவல் அலுவலர்
வட்டார போக்குவரத்து அலுவலகம்

------------------- நகரம்

------------------ மாவட்டம்

அஞ்சல் குரியீட்டென் -----------------
(முகவரி )

அய்யா ,

பொருள் ,

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005. பிரிவு 6-ன் கீழ்

பின்வரும் தகவல்கள் கோருதல் தொடர்பாக :

நான் பழகுநர் உரிமம் தேதியில் பெற்றுள்ளேன் .கடந்த தேதியில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துள்ளேன் .அது தொடர்பான விவரங்களை அளிக்குமாறு அன்புடன் கோருகிறேன் .

1. ஓட்டுநர் உரிமம் வழங்க உரிய ஆவணங்கள் நான் இணைத்து இருக்கிறேனா ?
2.ஏதேனும் ஆவணம் விடுபட்டிருந்தால் அது குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் அந்த தகவலின் நகல் வழங்கவும்

3.ஓட்டுநர் உரிமம் வேண்டி 1/07/2013 முதல் 31/07/2013 வரை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை என்ன ?

4. அதில் நான் அளித்த விண்ணப்பத்தின் வரிசை எண் என்ன ?

5. மேற்குறிப்பிட்ட மாதத்தில் வந்துள்ள விண்ணப்பங்களில் இதுவரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டவை எத்தனை ?

6. எனக்கு உரிமம் வழங்க காலதாமதத்திற்கான காரணம் அளிக்கவும்

7. ஓட்டுநர் உரிமம் கோரிய எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து உரிமம் வழங்க வேண்டும் என்று அரசு விதி உள்ளது ?

8. உரிய நடவடிக்கை எடுக்க தவறிய ,வீண் காலதாமதம் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அவரது உயர் அலுவலரின் பெயர் ,பதவி விபரம் அளிக்கவும் .

இடம் :
தங்கள் உண்மையுள்ள
தேதி தேதியுடன் கூடிய தங்கள் கையொப்பம்

இணைப்பு :விண்ணப்பகட்டணம் ரூ .10 செலுதப்பட்டதர்கான சான் று .( இவ்வாறு எழுதவும் )

ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...




ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி??...

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.

ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்
( http://uidai.gov.in/update-your-aadhaar-data.html)
சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.

ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.

Monday, November 24, 2014

கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?

கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?
அன்புள்ள கணிணி மாணவருக்கு,
கணிணி அறிவியல் படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடும், வேலை தேடப்போகும் மாணவருக்கு,
வணக்கம்.
உங்கள் வேலை தேடும் படலம் பற்றி சிறிது பேசலாமா?
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து, பட்டம் பெற்று, கணிணித் துறையில் வேலை தேடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 லட்சம் வேலைக்கு பணியிடங்கள் உருவாவது சாத்தியம் இல்லைதானே. இதனால் தான் அனைவருக்கும் உடனே வேலை கிடைப்பதில்லை.
ஒரு பத்து சதம் பேருக்குதான் InfoSys, TCS, CTS போன்ற பெரு நிறுவனங்களில் Campus Interview ல் வேலை கிடைக்கிறது. மீதி 90% பேருக்கு SME என்ற Small Medium Enterprises, குறு, சிறு நிறுவனங்களே வாய்ப்பளிக்கின்றன.
இந்த மாதிரியான குறு, சிறு, மத்திய நிறுவனங்களில் Fresherகளை வேலைக்கு எடுப்பதால் வரும் சில பிரச்சனைகளைப் பார்ப்போமா?
(http://www.kaniyam.com/how-to-get-a-computer-science-job/)\

அன்புள்ள கணிணி மாணவருக்கு,
கணிணி அறிவியல் படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடும், வேலை தேடப்போகும் மாணவருக்கு,
.உங்கள் வேலை தேடும் படலம் பற்றி சிறிது பேசலாமா?
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து, பட்டம் பெற்று, கணிணித் துறையில் வேலை தேடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 லட்சம் வேலைக்கு பணியிடங்கள் உருவாவது சாத்தியம் இல்லைதானே. இதனால் தான் அனைவருக்கும் உடனே வேலை கிடைப்பதில்லை.
ஒரு பத்து சதம் பேருக்குதான் InfoSys, TCS, CTS போன்ற பெரு நிறுவனங்களில் Campus Interview ல் வேலை கிடைக்கிறது. மீதி 90% பேருக்கு SME என்ற Small Medium Enterprises, குறு, சிறு நிறுவனங்களே வாய்ப்பளிக்கின்றன.
இந்த மாதிரியான குறு, சிறு, மத்திய நிறுவனங்களில் Fresherகளை வேலைக்கு எடுப்பதால் வரும் சில பிரச்சனைகளைப் பார்ப்போமா?
1. பயிற்சி
பெரு நிறுவனங்கள் போல இவை Fresherகளின் பயிற்சிக்கென 6 மத காலம், இடம், ஆசிரியர்களைத் தர முடியாது.
ஓரிரு வாரங்கள் தருவதே கடினம்.
NIIT போன்ற பெரிய தனியார் கணிணி பயிற்சி நிறுவனங்களில் 6 மாத படிப்பிற்கு ஏறக்குறைய 1 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டும் மாணவர்கள், அதை விடுத்து சிறு நிறுவனங்களில் சேர்ந்தால், அதே பயிற்சிக்கு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்.
இலவச பயிற்சி, நகரின் மத்தியில் கட்டிடம், குளிர் சாதனம், கணிணி, இணையம், தடையற்ற மின்சாரம் தந்து, சம்பளமும் தருவதற்கு, நிறுவனங்கள் ஒன்றும் தொண்டு அமைப்புகள் இல்லையே.
சரி. அப்படியே சில மாத இலவசப் பயிற்சி அளித்தாலும், இந்த மாணவர்கள் தமது திறனை வெளிப் படுத்த, இன்னும் 6 மாதம் ஆகிறது. இப்படியே ஒரு வருடம் ஓடி விடுகிறது.
ஒரு வருடம் கழிந்த பின், நீங்கள் பெரு நிறுவனங்களில் வேலை செய்யம் நண்பரோடு ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்.
“அவனுக்கு மாதம் 20,000 ரூபாய் சம்பளம். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனக்கும் அதே அளவு சம்பளம், வெளிநாட்டு வாய்ப்புகள் வேண்டும்”
என்று கூறி, வேலையை விட்டு நீங்கி, வேறு நிறுவனம் போகின்றீர்.
உங்களை நம்பி, வாடிக்கையாளரிடம் புதிய பணிகளை ஏற்றுக் கொண்ட நிறுவனம், மீண்டும் பணியாளரை தேடும் முயற்சியில் இறங்க வேண்டும். இதே போல் பலரும் செய்வதால்தான், நிறுவனங்கள் Fresher ஐ வேலைக்கு எடுக்க பயப்படுகின்றன.
ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவமுள்ள ஆட்களை வேலைக்கு எடுத்தால், ஓரிரு வாரங்கள் பயிற்சி மட்டுமே போதும். மூன்றாம் வாரத்திலேயே வேலை செய்யத் தொடங்கி விடுவர். நிறுவனத்திற்கும் உற்பத்தி கிடைத்துவிடும். இவர் ஒரே ஆண்டில் வேலையை விட்டாலும், நிறுவனத்திற்கு பெரிய இழப்பு இல்லை. ஒரு ஆண்டில் தந்த ஊதியத்திற்கு, தேவையான உழைப்பு கிடைத்திருக்கும்.
இதுவே Fresher ஐ வேலைக்கு எடுத்தால், பயிற்சியும் தந்து, சம்பளமும் தந்து, மிகவும் குறைந்த உற்பத்தி பெறும் நிலையே ஏற்படுகிறது. இதற்கு என்ன தீர்வு சொல்வீர்கள்?
நாளை நீங்களே ஒரு நிறுவனம் தொடங்கினால், உங்களுக்கும் இதே நிலை தானே ஏற்படும்? எப்படி சமாளிப்பீர்கள்?
“எல்லாம் சரிதான். வேலை கிடைத்தால்தானே அனுபவம் பெறுவது. வேலையே கிடைக்காமலும், அனுபவம் இல்லாமலும் இருக்கிறோமே!” என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
2. அறிவும் திறமையும்
அறிவும் திறமையும் அனுபவமும் வேலையில் சேர்ந்த பிறகு மட்டுமே வருவது அல்லவே. நாமே வளர்த்துக் கொள்ள வேண்டியது. சரிதானே?
பெரும்பாலான மாணவர்கள் சொல்வது என்ன? “எனக்கு ஒரு வேலை கொடுங்கள். பிறகு நான் தேவையானதைக் கற்றுக் கொள்கிறேன். அதற்குப் பிறகு, திறமையை வளர்த்துக் கொள்கிறேன்”. உண்மைதானே.
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அடிக்கடி வெளியூர் செல்ல கார் வாங்குகிறீர்கள். நல்ல கார் ஓட்டுனர் தேட்கிறீர்கள். நான் உங்களிடம் நேர்முகத் தேர்விற்கு வந்துள்ளேன். கார் டிரைவிங் வகுப்பு சென்றுள்ளேன். ஆனால் கார் ஓட்டிய அனுபவம் இல்லை.
“நான் பயிற்சி முடித்துள்ளேன். சான்றிதழ் வைத்துள்ளேன். ஆனால் அனுபவம் இல்லை. என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் புது காரை என்னிடம் கொடுங்கள். முடிந்தால் சில மாதம் பயிற்சியும் கொடுங்கள். நன்கு கற்றுக் கொண்டு, பழகிய பின், பிறகு உங்கள் குடும்பத்தினரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்கிறேன்.”
இப்படி சொன்னால் என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்வீர்களா? ஆனால் இப்படித் தானே நீங்களும் நிறுவனங்களிடம் சொல்கிறீர்கள்?
கார் ஓட்டிப் பழகவாவது சில லட்சங்களில் கார் வாங்க வேண்டும். கணிணியில் திறமையை வளர்க்க உங்களிடம் உள்ள கணிணியே போதுமே.
கிரிக்கெட்டில், மட்டையை சும்மாவே வைத்திருந்தால், சச்சினாக இருந்தாலும் நமக்கு கோபம் வருகிறதே. தொடர்ந்து ரன் எடுக்கவும், அடிக்கடி 4, 6 என அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நீங்கள் மட்டும் கணிணியை வைத்துக் கொண்டு, மென்பொருள் எதுவும் உருவாக்காமல், பாட்டு கேட்டு, படம் பார்த்து, விளையாடிக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் அரட்டை அடிப்பீர்கள். என்ன நியாயம் இது?
3. நேர்முகத் தேர்வு
என் நிறுவனத்திற்கு ஒரு 100 Fresher வேண்டும் என விளம்பரம் செய்தால், குறைந்தது 1000 பேராவது Resume அனுப்புகின்றனர். எல்லா Resume களிலும் பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட்.
“எனக்கு C, C++, Java, Oracle, HTML, CSS, Javascript, VB, DotNet, ASP, Photoshop, Windows போன்றவை தெரியும்.”
இவ்வாறு பல நுட்பங்கள் தெரிந்த Fresherகளை வைத்து எந்த வகை மென்பொருட்களையும் எளிதாக உருவாக்கி விடலாம் என்ற நம்பிக்கை வருகிறது. இவர்களில் சிலரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்போம்.
“வணக்கம் தம்பி!”
“வணக்கம் சார்!”
“உங்களுக்கு என்னென்ன தெரியும்?”
“கணிணியில் எல்லா நுட்பங்களும் தெரியும். C, C++, Java, DotNet, Oracle…இத்யாதி!”
“ஓ! மிக்க மகிழ்ச்சி! என்ன Project செய்துள்ளீர்கள்?”
“அதுவா சார்!. போன மாதம் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பினார்களே. அதற்கு தேவையான மென்பொருள் ஒன்று செய்தேன். Cloud Computing ல் Fuzzy Logic ம் Artificial Intelligence ம் சேர்த்து Android, iOS ல் இயங்கும்
ஒரு மென்பொருளை செய்துள்ளேன்.”
“மிக்க மகிழ்ச்சி! என் கடைக்குத் தேவையான ஒரு வரவு/செலவு மென்பொருளை நீங்களே செய்து தர முடியுமா?”
“நானேவா? அது கஷ்டம் சார். இன்னும் நிறைய படிக்க வேண்டும். எனக்கு வேலை கொடுங்கள். பிறகு படித்து பிறகு செய்து கொடுக்கிறேன்.”
“ஏன் உங்களால் முடியாது? நீங்களேதானே உங்கள் பெரிய Project ஐ செய்தீர்கள்? அதைப்பற்றி கூட விரிவாக விளக்கினீர்களே.”
“அதுவா சார். அது வந்து… அது வந்து… பிராஜெக்ட் நான் செய்யவில்லை.”
“பின்னே? யார் செய்தார்கள்?”
“தியாகராய நகரில் ஒரு பிராஜெக்ட் சென்டரில் 10,000 ரூபாய்க்கு வாங்கினோம். ஆனால் அது பற்றி எனக்கு எல்லாமே தெரியும். எனக்கு வேலை கொடுங்கள். தேவையானவற்றை நன்கு கற்று, பிறகு செய்து கொடுக்கிறேன்.”
இப்படித்தான் 100க்கு 95 பேர் சொல்கின்றனர். வெகு சிலரே தாமாக சொந்த பிராஜெக்ட் செய்து, புது மென்பொருள் உருவாக்கும் திறனையும் அனுபவத்தையும் பெறுகின்றனர்.
இவ்வாறு அடிப்படை திறன் கூட இல்லாதவருக்கு எப்படி வேலை தருவது?
மருத்துவம் படித்துவிட்டு எனக்கு ஒன்றுமே தெரியாது என்பவரிடம் எப்படி நீங்கள் மருத்துவம் பார்ப்பீர்கள்?
அதே போல் தானே கணிணி படிப்பும்?
கல்வியில் மிகவும் அடிநிலை என்பது ITI. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்தால் கூட ITI சேரலாம். ITIல் வெல்டிங் பற்றி இரு ஆண்டுகள் படித்து முடித்த மாணவரிடம், நமது வீட்டிற்கு ஒரு இரும்பு கதவு செய்து தரச் சொல்லலாம். அவரும் மறுக்காமல் செய்து தருவார்.
12வது முடித்து, 3 அல்லது 4 அல்லது 6 ஆண்டுகள் கணிணி பற்றி விரிவாகப் படித்து வரும் கணிணி மாணவருக்கு மட்டும் ஒரு குட்டி மென்பொருள் கூட சுயமாக உருவாக்கத் தெரியாது.
எதுவுமே தெரியாமல் வரும் மாணவருக்கு வேலை தர நிறுவனங்கள் தயாராக இருப்பதில்லை. Reference, Campus Interview, Off Campus என வேலை கிடைப்போர் பத்து சதம் மட்டுமே. மீதியுள்ளோர் தமது திறமை மூலம் மட்டுமே வேலை தேட வேண்டியுள்ளது.
4. அனுபவம்/திறமை பெறுவது எப்படி?
ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை எப்போதும் பயிற்சியில் ஈடுபட்டு, விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துவது. “இந்திய கிரிக்கெட் குழுவில் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள்!.. பிறகு விளையாட்டை கற்றுக் கொண்டு, பிறகு சிறப்பாக விளையாடி, பிறகு இந்தியாவிற்கு கோப்பை வாங்கித் தருகிறேன்.” என்று யாருமே சொல்வதில்லை.
கிரிக்கெட்டில் திறமை பெற, மட்டையை எடுத்து பயிற்சி செய்ய வேண்டும். கணிணியில் திறமை பெற, பயிற்சி செய்தாலே போதுமே.
கணிணி மென்பொருள் உருவாக்கும் அனுபவம் பெறத் தேவையானவை ஒரு கணிணியும், இணைய இணைப்பும் மட்டுமே.
பின்வரும் எல்லாவற்றையும் செய்தாலே அனுபவம் தானாய் கிடைக்கும்.
1. Syllabus தாண்டி கற்றுக் கொள்க.
GNU/Linux, PHP, Python, Ruby, MySQL என பல நுட்பங்களை கற்றுக் கொள்க.
2. Tech குழுக்களில் சேர்க.
ஊரில் உள்ள Tech குழுக்களில் சேர்க. குழு இல்லையென்றால் தொடங்குக. அடிக்கடி சந்தித்து புது விஷயஙுகளை கற்றுக் கொள்க.
3. GNU/Linux பயன்படுத்துக.
உலகமே GNU/Linux ஐ விரும்பி வரவேற்கிறது. உங்களிடம் உள்ள விண்டோஸை அழித்துவிட்டு, உபுண்டு, டெபியன், ஃபெடோரா என ஏதாவது ஒரு லினக்ஸை நிறுவுங்கள். Commandline பயன்படுத்தும் போது எக்கச்சக்க புது விஷயங்கள் கற்றுக் கொள்வீர்கள்.
4. மென்பொருள் மூல நிரல் படியுங்கள்.
குனு/லினக்ஸில் எல்லா மென்பொருட்களுக்கும் source code கிடைக்கும். அவற்றை பதிவிறக்கம் செய்து சும்மாவேனும் திறந்து படித்துப் பாருங்கள்.
5. மென்பொருள் உருவாக்குங்கள்.
சின்ன கால்குலேட்டர் செய்யுங்கள். முகவரிப் புத்தகம் ஒன்று. இணைய இணைப்பை சோதனை செய்யும் கருவி, ஒரு அலாரம், ஒரு Backup செய்யும் மென்பொருள், Web scrapping மென்பொருள் என குட்டி குட்டியாக பல மென்பொருள் செய்யுங்கள். ஒவ்வொன்றுக்கும் ஓரிரு நாளே ஆகும்.
பிறகு உங்களை சுற்றியுள்ளோரிடம் கேட்டு, அவர்களுக்கு தேவையான மென்பொருளை செய்து கொடுங்கள். கடைகளுக்கு தேவையான Billing, Accounts, Attendance என பல மென்பொருட்கள் தேவைப்படும். அவற்றை இலவசமாகவே செய்து கொடுங்கள்.
6.Version Control கற்றுக் கொள்க.
Source Code ஐ பலருடனும் இணைந்து பகிர்ந்து வேலை செய்ய Version Control System பயன்படுகிறது. Subversion (SVN), GIT கற்றுக் கொள்ளுங்கள். http://github.com -ல் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி, உங்கள் மென்பொருட்கள் யாவற்றையும் இங்கு சேருங்கள். பிறர் உருவாக்கிய மென்பொருட்களுக்கும் பங்களியுங்கள். உங்கள் Facebook Profile ஐ விட github Profile ஏ உங்கள் வளர்ச்சியை தீர்மானிக்கும்.
7. கட்டற்ற மென்பொருட்களுக்கு பங்களியுங்கள்
உங்களுக்கு பிடித்தமான கட்டற்ற மென்பொருளுக்கு பங்களியுங்கள். ஒரு வரி நிரல் தந்தாலும் அது பெரிய விஷயமே. நிரல் மட்டுமின்றி ஆவணமாக்கம், படம், IRC, Forum, Mailing list ஆகியவற்றில் உதவி, Packaging, பரப்புரை செய்தல், மொழிமாற்றம் செய்தல் என ஏதாவது ஒரு வகையில் பங்களியுங்கள். “How to contribute to Open Source Software?” என்று தேடுங்கள். பிடித்த மொழியில், பிடித்த மென்பொருளுக்கு உதவுங்கள்.
8. வலைப்பதிவு எழுதுங்கள்
நீங்கள் செய்ய்ம் எல்லாவற்றையும் உங்கள் வலைப்பதிவில் எழுதுங்கள். தினமும் விடாமல் எழுதுங்கள். உங்களின் மிகச்சிறந்த Visiting Card ஆக உங்கள் வலைப்பதிவு அமையும்.
9. Resume-ல் இவை எல்லாவற்றையும் சேருங்கள்.
உங்கள் வலைப்பதிவு, உங்கள் github முகவரி, நீங்கள் பங்களிக்கும் கட்டற்ற மென்பொருட்கள், Syllabus தாண்டி நீங்கள் கற்றுக் கொண்ட நுட்பங்கள், இவற்றையெல்லாம் உங்கள் Resume-ல் சேருங்கள்.
10. வேலை கேட்காதீர்கள், Project Work கேளுங்கள்.
உங்களுக்கு தெரிந்தோரிடமெல்லாம் வேலை கேட்டு நச்சரிக்காதீர்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு தேவைப்படும் மென்பொருளை செய்து தருவதாய் சொல்லுங்கள். Project Work ஆக செய்யுங்கள்.
படித்து முடித்து, பின் சும்மாவே வேலை மட்டும் தேடிக் கொண்டிருந்தால், ஒரு வருடம் ஓடியே விடும். அதற்குள் அடுத்த ஆண்டு மாணவர்கள் வெளியே வந்து Fresher ஆகி விடுவர். நீங்கள் Fresher ஆகவும் இல்லாமல், வேலையும் இன்றி, அனுபவமும் இன்றி மிகவும் குழம்பி நிற்பர்.
இந்த ஒரு ஆண்டில், மாதம் ஒரு Project என பத்து, பன்னிரண்டு Projectகளை நீங்களே செய்து விட்டால், அதையே ஒரு ஆண்டு அனுபவமாக சொல்லலாம். Freelancer என்று தைரியமாக உங்கள் Resume ல் அறிவிக்கலாம்.
ஒரு ஆண்டு அனுபவம் உள்ளது என்றே அறிவித்து வேலை தேடுங்கள். பிறகு பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை. நிஜமாகவே அனுபவம் இருப்பதால், நேர்முகத்தேர்வும் மிக எளிதாகவே இருக்கும்.
பல Project கள் செய்யும் போது, வணிக ரீதியான மென்பொருட்களை உருவாக்கி பணமும் சம்பாதிக்கலாம். நல்ல குழுவினர் கிடைத்தால், தனியாக நிறுவனமும் தொடங்கலாம்.
உழைப்பும் திறமையும் இருந்தால் போதும். வானமே உங்கள் எல்லைதான்.
எனதருமை சச்சின்களே. 50களையும் 100களையும் சச்சின் குவித்தது போல, மென்பொருட்களை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களுக்கு பங்களித்து, உங்கள் திறமையால், சுடர்விடும் சூரியனாய் மிளிருங்கள்.
வாழ்த்துக்கள்.
இந்த இணைப்புகளையும் பாருங்கள்.

Monday, November 10, 2014

Job Opportunities in UAE


We have compiled the job opportunities from top UAE companies this November. 

Jobs in Dubai - November 2014
*Alshaya Group - http://dubaiofw.com/alshaya-uae-job-opportunities-november-2014/
*Chalhoub Group - http://dubaiofw.com/chalhoub-group-uae-multiple-job-openings-november-2014/
*Jumeirah Group - http://dubaiofw.com/jumeirah-jobs-november-2014/
*Al Futtaim Group - http://dubaiofw.com/al-futtaim-uae-jobs-november-2014/
*Dubai Duty Free - http://dubaiofw.com/dubai-duty-free-jobs-2014/
*Ritz Carlton Hotel - http://dubaiofw.com/ritz-carlton-uae-jobs-november-2014/
*Atlantis, The Palm - http://dubaiofw.com/atlantis-the-palm-jobs-november-2014/
*Marriott Hotel - http://dubaiofw.com/marriot-hotel-job-openings-november-2014/
*The Address Hotel + Resorts - http://dubaiofw.com/the-address-hotels-resorts-job-opportunities-november-2014/
*Hyatt Hotel - http://dubaiofw.com/hyatt-uae-jobs-november-2014/
*Al Tayer Group - http://dubaiofw.com/al-tayer-uae-jobs-november-2014/
*Hilton Hotel - http://dubaiofw.com/hilton-hotel-uae-jobs-november-2014/
*Du Telecom - http://dubaiofw.com/du-telecommunications-uae-careers-november-2014/
*Damac - http://dubaiofw.com/damac-uae-jobs-november-2014/
*Microsoft - http://dubaiofw.com/microsoft-uae-jobs-november-2014/
*DHL - http://dubaiofw.com/dhl-uae-jobs-november-2014/
*Emirates Transport - http://dubaiofw.com/emirates-transport-jobs-november-2014/
*Mashreq Bank - http://dubaiofw.com/mashreq-uae-jobs-november-2014/

For more Dubai job updates, facebook.com/thedubaiOFW

Jobs in Abu Dhabi - November 2014
*Alshaya Group - http://abudhabiofw.com/alshaya-jobs-november-2014/
*Jumeirah Group - http://abudhabiofw.com/jumeirah-jobs-november-2014/
*Chalhoub Group - http://abudhabiofw.com/chalhoub-group-jobs-november-2014/
*Hyatt Hotel - http://abudhabiofw.com/hyatt-jobs-november-2014/
*Al Futtaim Group - http://abudhabiofw.com/al-futtaim-jobs-november-2014/
*Hilton Hotel - http://abudhabiofw.com/hilton-job-november-2014/
*Al Tayer Group - http://abudhabiofw.com/al-tayer-jobs-november-2014/

For more Abu Dhabi job updates, facebook.com/AbuDhabiOFW

To apply, please click the "APPLY HERE" in each corresponding job description. This will bring you to the actual page of the company website. Good luck in applying everyone!